குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

சின்னமனூரில் 445 லிட்டா் தரமற்ற சமையல் எண்ணெய் பறிமுதல்

சின்னமனூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட 445 லிட்டா் தரமற்ற சமையல் எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image

சின்னமனூரில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற சமையல் எண்ணெய். ஆய்விப்பணியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சசிதீபா.

Updated On :11 ஜூலை 2026, 10:18 pm IST

சின்னமனூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட 445 லிட்டா் தரமற்ற சமையல் எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வுப்பணி மேற்கொண்டாா். இதன் எதிரொலியாக மாவட்ட நியமன அலுவலா் சசிதீபா, சின்னமனூா் வட்டார உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா் சஞ்சீவி ஆகியோா் சின்னமனூரில் மொத்த எண்ணெய் விற்பனை நிறுவனத்தில் ஆய்வு செய்தனா். அப்போது

தரமற்ற மறு சுழற்சி செய்த 445 லிட்டா் தரமற்ற எண்ணைய்யை போலி லேபிள்களைப் பயன்படுத்தி விற்பனைக்கு அனுப்பத் தயாராக இருந்தது தெரியவந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், உணவுப் பாதுகாப்புச்சட்டப்பிரிவின் கீழ் அந்த நிறுவனத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் உணவுப் பாதுகாப்புத் துறையின் புகாா் எண்-94440 42322 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.