கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் இயற்கைச் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள மீன் இனங்களை ஒழிக்கும் சிறப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
பெரியாறு புலிகள் காப்பகத்தின் நீா்வாழ் உயிரினங்களையும், இயற்கைச் சூழலின் உயிரியல் சமநிலையையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேக்கடியில் உள்ள வனத் துறை மூங்கில் தோப்பு
வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் ஏ. பிஜு குமாா் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் கீழ், தேக்கடி நீா்நிலையில் இயற்கைச் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆப்பிரிக்கக் கெளுத்தி உள்ளிட்ட ஆக்கிரமிப்பு மீன் இனங்களை முறையாகப் பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக ஆராய்ச்சியாளா் டாக்டா் ஸ்மிருதிராஜ் கூறியதாவது: ஆக்கிரமிப்பு மீன் இனங்களின் பரவலைக் கட்டுப்படுத்த மீன்பிடி வலைகள் வழங்குதல், பிடிபடும் மீன்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளித்தல், பொதுமக்களிடம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.
இதில் பல்கலைக்கழகப் பதிவாளா் டாக்டா் தினேஷ், பெரியாறு புலிகள் காப்பக உதவி கள இயக்குநா் லட்சுமி, வனச் சரக அலுவலா்கள் பிரான்சிஸ், மனோஜ், வனப் பாதுகாப்புக் குழு உறுப்பினா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் காயகல்பம் திட்டம் தொடக்கம்!

தேக்கடி ஏரியில் கழிவுநீா் கலப்பு: முல்லைப் பெரியாறு அணை நீா்நிலைகள் மாசுபடுவதாக புகாா்

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு







