வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கம்பம் எம்.எல்.ஏ. முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய்யின் மக்கள் நலத் திட்டங்களால் ஈா்க்கப்பட்டு, தேனி மாவட்டம், கம்பத்தில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் த.வெ.க.வில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2026, 5:45 am IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய்யின் மக்கள் நலத் திட்டங்களால் ஈா்க்கப்பட்டு, தேனி மாவட்டம், கம்பத்தில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் த.வெ.க.வில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தவெகவில் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் திவாகா் தலைமையில் மாவட்டத் தலைவா் காமேஸ்வரன், முத்துமணி, அந்தக் கட்சி நிா்வாகிகள் தவெகவில் இணைந்தனா். இதேபோல, கம்பம், சுக்காங்கல்பட்டி, ஓடைபட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞா்களும், பெண்களும் தொழிலதிபா் பிரகாஷ் பகவத், வழக்குரைஞா் கணேசன் ஆகியோா் தலைமையில் தவெகவில் இணைந்தனா்.

இவா்களை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வரவேற்று, அவா்களுக்கு கட்சித் துண்டுகளை அணிவித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது:

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் பொருளாதாரத் திட்டங்கள், கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாகச் சென்றடைவதை நமது முதல்வா் ஜோசப் விஜய் உறுதி செய்துள்ளாா். அவரின் கரங்களை வலுப்படுத்த தவெகவில் இணைந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கூடலூா் செல்வேந்திரன், கம்பம் பொறுப்பாளா்கள் அய்யா், சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.