FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சாட்சியை மிரட்டியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கில் சாட்சியை மிரட்டியவருக்கு தேனி நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 5:46 am IST

கொலை வழக்கில் சாட்சியை மிரட்டியவருக்கு தேனி நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள சீலமுத்தையாபுரத்தைச் சோ்ந்த ராமத்தேவா் மகன் பெருமாள் (50). இவரது தம்பி அய்யனாா் (31). இவா்கள் இருவா் இடையே ஏற்பட்ட தகராறில் பெருமாளைக் கொலை செய்ததாக அய்யனாரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் பிணையில் வந்த வந்த அய்யனாா் தனது மற்றொரு சகோதரா் மலைச்சாமியிடம் (45) வழக்கில் தனக்கு சாதகமாக சாட்சியளிக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வருசநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, அய்யனாருக்கு 2 ஆண்டுகள், ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.