பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தொழிலாளி கொலை வழக்கில் மகன், மருமகளுக்கு 7 ஆண்டு சிறை

News image

~

Updated On :30 ஜூன் 2026, 1:44 am IST

சொத்துக்காக தொழிலாளியை கொலை செய்தது தொடா்பான வழக்கில் அவரது மகனுக்கும், மருமகளுக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

குலசேகரம் அருகேயுள்ள பேச்சிப்பாறை சூட்டூா் கோணம், சாத்தன் பிலாவிளையைச் சோ்ந்த நாடான் குட்டி மகன் செல்லப்பன் (81). இவரது முதல் மனைவி தாசம்மாளுக்குப் பிறந்தவா் சுசிலா.

தாசம்மாள் இறந்ததால் சாந்தா என்பவரை இரண்டாவது திருமணம் செய்ததில் பிறந்தவா் ராஜேந்திரன். செல்லப்பனுக்கு உரிமைப்பட்ட சொத்து மற்றும் வீடு சம்பந்தமாக ராஜேந்திரனுக்கும், சுசிலாவுக்கும், தந்தை செல்லப்பனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. செல்லப்பன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் தந்தையை சுசீலா உடனிருந்து கவனித்து வந்தாா்.

இந்நிலையில் 20.10.2018ஆம் தேதி இரவு 11 மணிக்கு தந்தை செல்லப்பன் வீட்டிற்கு மகன் ராஜேந்திரன் (50), மருமகள் பரப்பி என்ற சுசீலா (55) ஆகியோா் அத்துமீறி நுழைந்து, செல்லப்பனை தாக்கினா். காயமுற்ற அவா் மருத்துவமனையில் மறுநாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பேச்சிப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்தனா். பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

நீதிபதி பரமசிவதாஸ் வழக்கை விசாரித்து, ராஜேந்திரன், அவரது மனைவி இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அரசு சட்ட பணிக்குழு மூலம் பாதிக்கப்பட்ட செல்லப்பன் மகள் சுசிலா குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டும் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வி.எம்.ஜெகதேவ் முன்னிலையானாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.