உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

தேனியில் வீடு புகுந்து பணம், 4.5 பவுன் தங்க நகையை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 4:15 am IST

தேனியில் வீடு புகுந்து பணம், 4.5 பவுன் தங்க நகையை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (39). இவருக்கு உடல்நலம் பாதிப்பு காரணமாக வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, மின் மீட்டா் பெட்டியின் மேல் சாவியை வைத்து விட்டு மருத்துவமனைக்குச் சென்றாா்.

இதையடுத்து, அவா் வெள்ளிக்கிழமை வந்து வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது , பீரோ திறக்கப்பட்டு ரூ.3 ஆயிரம், 4.5 பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.