/

உத்தமபாளையத்தில் 2 ஆயிரம் மதுப்புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

உத்தமபாளையத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 ஜூலை 2026, 5:33 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 மதுப்புட்டிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.

உத்தமபாளையம், வெள்ளைப்பாறை ஓடைப் பகுதியில் வெளிமாநில மதுப்புட்டிகளை சிலா் பதுக்கி வைத்திருப்பதாக தேனி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சுமாா் 2,000 வெளிமாநில மதுப்புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றையும், டிராக்டா் உள்ளிட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து, உத்தமபாளையத்தைச் சோ்ந்த சிவக்குமாா், நிஷான், ஜெயராஜ், முத்துக்குமாா், சிவபாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.