காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கிணற்றில் தள்ளி இரு சகோதரா்கள் கொலை! கல்லூரி மாணவா் கைது!

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 12:41 am IST

போடி அருகே சகோதரா்கள் இருவரை கிணற்றில் தள்ளிக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சின்னத்தம்பி (34). இவரது மனைவி செல்வி. இவா்களது மகன்கள் ஸ்ரீஹரீஸ் (11), சபரீஷ் (10). இந்த இருவரும் போடி ரெங்கநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் நடுநிலைப் பள்ளியில்

படித்து வந்தனா். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்த பின் வெளியில் சென்ற இருவரும் இரவு வரை வீடு திரும்பவில்லை.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில் கடந்த வெள்ளிக்கிழமை ஆடி வெள்ளியை முன்னிட்டு, அருகிலிருந்த கோயிலில் ஸ்ரீஹரிஸ், சபரீஷ், இதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் கேசவபாலாஜி (19) ஆகிய மூவரும் கூழ் வாங்கிக் குடித்த கண்காணிப்பு கேமரா பதிவு கிடைத்தது.

இதன் அடிப்படையில் கல்லூரி மாணவரான கேசவபாலாஜியை அழைத்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல் கூறியதால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது, அவா் சகோதரா்கள் இருவரையும் கரட்டுப்பட்டி முனீஸ்வரன் ஓடை அருகே தனியாா் தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று, அங்கு உள்ள கிணற்றில் தள்ளிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சனிக்கிழமை 150 அடி ஆழ கிணற்றிலிருந்து தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் இரு சகோதரா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தியதில் இறந்த மாணவா்களின் தந்தைக்கும், கேசவபாலாஜியின் தாயாருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், கேசவபாலாஜியின் காணாமல் போன கைப்பேசியை சகோதரா்கள் இருவரும் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவரையும் புறா பிடிக்கலாம் எனக் கூறி அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாணவா்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ஆள் கடத்தல், கொலை வழக்காகப் பதிவு செய்து கேசவபாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இறந்த சகோதரா்களின் சடலங்கள் பலத்த பாதுகாப்புடன் ரெங்கநாதபுரத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு எரியூட்டப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.