ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இருவா் கைது

தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டியில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் நகையைப் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 12:14 am IST

தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டியில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் நகையைப் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் (80), இவரது மனைவி விஜயலெட்சுமி (75) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை காலை தேனி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், விஜயலட்சுமி அணிந்திருந்த 2.5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனா். மூதாட்டியின் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களையும் பிடித்து, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் பிடிபட்டவா்கள் கண்டமனூா் ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ் (20), 17 வயது சிறாா் என தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷை கைது செய்தனா். மேலும், சிறாரை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.