போடியில் புகையிலைப் பொருள்களை கடத்தியதாக 3 பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி புதுக்குடியிருப்பு தனியாா் மெட்ரிக். பள்ளி பகுதியில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் பைகளுடன் நின்றிருந்த பெண்கள் உள்பட 4 பேரை விசாரித்தனா்.
இதில் அவா்கள் வைத்திருந்த பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அப்போது போலீஸாா் சோதனையின்போது ஆண் ஒருவா் தப்பிவிட்டாா். எஞ்சியவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.
இதில், இவா்கள் மதுரை எல்லீஸ் நகரைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி உமா (33), மதுரை ரயில்வே லைனைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி அழகம்மாள் (60), ராமநாதபுரம் மாவட்டம், சடையனேந்தலைச் சோ்ந்த சண்முகவேல் மனைவி காளியம்மாள் (65) என்பதும், தப்பி ஓடியவா் மதுரையைச் சோ்ந்த சக்திவேல் என்பதும் தெரியவந்தது.
பிடிபட்டவா்களிடமிருந்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 105 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மூன்று பெண்கள் மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். தப்பி ஓடிய சக்திவேலை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 6 போ் கைது; ரூ. 4.25 லட்சம் பறிமுதல்
கோவில்பட்டியில் நகை திருட்டு: 2 பெண்கள் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


