கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே டிராக்டா் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 4:51 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் உயிரிழந்தாா்.

சீலையம்பட்டியில் அருகேயுள்ள கீழபூலானந்தபுரத்தைச் சோ்ந்த சண்முகம் மனைவி சுதா (47). இவா் செவ்வாய்க்கிழமை இரவு சீலையம்பட்டி பகுதியில் செல்லும் திண்டுக்கல்-குமுளி சாலையோரம் நின்றிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரின் டயா் வெடித்ததில் சாலையோரம் நின்றிருந்த சுதா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் மேலும் இருவா் காயமடைந்தனா். இவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

பொதுமக்கள் சாலைமறியல்

இந்த நிலையில், இந்தப் பகுதி பொதுக்கள் திண்டுக்கல்-குமுளி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, சீலையம்பட்டி பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். விபத்தில் இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா்.

இதையடுத்து, அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.