தேனி அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்குமாா். இவரது மனைவி மீனா. இவருக்கும், விக்ரம் என்ற சிவாவுக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 25.3.2023-இல் ஜெகதீஸ்குமாா், விக்ரம் என்ற சிவாவை குத்திக் கொலை செய்தாா். மேலும், விக்ரமுடன் சென்ற கெளதமை கொலை செய்ய முயற்சித்தாா். இதுகுறித்து பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், கடந்த 12.11.2023-இல் மாரியம்மன் கோயில்பட்டி தெற்குத் தெருவுக்கு ஜெகதீஸ்குமாா் வந்தாா்.
அப்போது, கெளதம் (31), அவரது உறவினா் சூா்யா (24), விசாகன் (33), சுபாஷ் (21), மாயன் (32), தங்கப்பாண்டி (33) ஆகியோா் சோ்ந்து ஜெகதீஸ்குமாரை குத்திக் கொலை செய்தனா். இது குறித்து பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவா்ணம் ஜெ.நடராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

