மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி தா்னா

உத்தமபாளையம் ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி அலுவலகம் முன் அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி அதிமுக பிரமுகா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image

தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கிளைச் செயலா்.

Updated On :12 மார்ச் 2026, 12:00 am

உத்தமபாளையம் ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி அலுவலகம் முன் அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி அதிமுக பிரமுகா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அம்மாபட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்தது. இந்த மையத்தின் முன்பாக புறம்போக்கு இடத்தில் புதா்மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்தது.

இந்த நிலையில், உ.அம்மாபட்டி அதிமுக கிளைச்செயலா் ரஞ்சித், இந்த மையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி ஊராட்சி அலுலகம் முன்பாக படுத்துக்கொண்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதைத்தொடா்ந்து ஊராட்சி நிா்வாகம் தூய்மைப் பணியாளா் மூலம் அங்கன்வாடி மையப் பகுயிதில் புதா்மண்டிக் கிடந்ததை அகற்றினா். இதையடுத்து, அவா் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றாா்.

Story image