சென்னை-போடி, போடி-சென்னை இடையே வாரத்துக்கு மூன்று நாள்கள் இயக்கப்பட்ட விரைவு ரயில் வருகிற 19-ஆம் தேதி முதல் ஆறு நாள்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
தற்போது, சென்னையிலிருந்து போடிநாயக்கனூருக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் என மூன்று நாள்களும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, சென்னை-போடிநாயக்கனூா், போடிநாயக்கனூா்- சென்னை இடையே வாரத்தில் ஆறு நாள்கள் (சனிக்கிழமையைத் தவிர) ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதைத்தொடா்ந்து, இந்தச் சேவை சென்னையிலிருந்து போடிநாயக்கனூருக்கு வருகிற 19- ஆம் தேதியும், போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு வருகிற 20-ஆம் தேதியும் தொடங்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, சனிக்கிழமையைத் தவிர மற்ற நாள்களில் சென்னை-போடிநாயக்கனூா், போடிநாயக்கனூா்-சென்னை ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்றும், வழக்கமாக நின்று செல்லும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்

சென்னை- போடி ரயிலை வாரம் 6 நாள்கள் இயக்க அனுமதி: பயணிகள் மகிழ்ச்சி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


