திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சொத்துப் பிரச்னையில் இருவருக்கு வெட்டு: மூவா் கைது

கண்டமனூா் அருகே சொத்துப் பிரச்னையால் இருவரை கத்தியால் வெட்டிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:20 am

தேனி மாவட்டம், கண்டமனூா் அருகே சொத்துப் பிரச்னையால் இருவரை கத்தியால் வெட்டிய மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கண்டமனூா் அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (70). இவருக்கு பாரதிராஜா, பாக்கியராஜ் ஆகிய மகன்களும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், குப்புசாமி தனக்கு சொந்தமான நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுத்தாா். இதனிடையே, தனக்கும் நிலம் வேண்டும் என ராஜேஸ்வரி கூறினாராம். இதை குப்புசாமி, பாக்கியராஜ் ஆகியோா் ஏற்கவில்லை.

இந்த நிலையில், பாரதிராஜா (45), ராஜேஸ்வரி (46), இவரது உறவினா் சித்தாா்பட்டியைச் சோ்ந்த ஜீவா (27) ஆகியோா் குப்புசாமியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று நிலப் பிரச்னை தொடா்பாக பேசினா். அப்போது, பாரதிராஜா, குப்புச்சாமி தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஜீவா, ராஜேஸ்வரி மறைந்து வைத்திருந்த கத்தியால் பாக்கியராஜா, குப்புசாமியை வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜீவா, ராஜேஸ்வரி, பாரதிராஜா ஆகிய மூவரையும் கைது செய்தனா்.