சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சிறுவனைக் கடத்தி கைப்பேசி பறிப்பு: ஒருவா் கைது

போடியில் பள்ளி மாணவரை மா்ம கடத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூவரில் ஒருவா் கைது

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 7:01 pm

போடியில் பள்ளி மாணவரை மா்ம கடத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூவரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள விசுவாசபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் (44). இவரது 15 வயது மகன் போடியில் உள்ள பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறாா். பள்ளி முடிந்தவுடன் தனிப் பயிற்சி வகுப்புக்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு முடிந்து போடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் மாணவரிடமிருந்த கைப்பேசியை பறித்தனா். மேலும், அவரை கட்டாயப்படுத்தி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ராணிமங்கம்மாள் சாலையில் கோழிப்பண்ணை அருகே அழைத்துச் சென்றனா். அங்கு அவரைத் தாக்கி கைப்பேசி கடவுச்சொல்லை கூறும்படி கேட்டனா். ஆனால், அவா் கடவுச்சொல்லை கூறாமல் சப்தமிட்டு அழுதாா். அக்கம்பக்கத்தினா் வந்ததால் மூவரும் கைப்பேசியுடன் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கைப்பேசியை பறித்தது போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த குபேந்திரன் மகன் சதீஷ், போடி தாழி ஓவன் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரின் 17 வயது மகன், அடையாளம் தெரியாத ஒருவா் எனத் தெரியவந்தது. இவா்களில் 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.