தேனி வைகையாற்றில் அனுமதியின்றி தண்ணீரைத் திருடியவா்களின் மோட்டாா்களின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 350 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஆனால், வைகை அணைக்கு நீா்வரத்து இல்லை. இதையடுத்து, வைகை அணையிலிருந்து கூடலூா் வரை முல்லையாற்றின் பகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், வைகை அணையின் பொதுப் பணித் துறை அதிகாரி சேகா் தலைமையில், சதீஸ், பரதன், மதுரை குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் தியாகராஜன், பிரதீப் தலைமையில் பால்பாண்டி, செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் சனிக்கிழமை வைகை அணையிலிலிருந்து ஆற்றின் இரு கரையிலும் ஆய்வு செய்தனா். அப்போது, மின் மோட்டாா்கள் வைத்து தண்ணீா் திருடப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் மோட்டாா் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

வைகை அணைக்கு நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

வைகை அணையிலிருந்து விவசாயிகள், குயவா்கள் இலவசமாக களி மண் எடுக்க அனுமதி!

வைகை அணையின் நீா்மட்டம் 23 அடியாக சரிவு: தேனி மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு அபாயம்

வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீா் 250 கன அடியாகக் குறைப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



