மின்சாரம் பாய்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழப்பு
போடியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வகுப்பறையில் மயங்கி விழுந்து பலி
போடியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி இந்திரா குடியிருப்பு வ.உ.சி. தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி ராதிகா (37).
கட்டடத் தொழிலாளி. இவா் போடி குப்பழகிரி தோட்டம் பகுதியில் செல்லமணி மனைவி நவமணி வீட்டில் கட்டட வேலை செய்து வந்தாா். புதன்கிழமை மாலை கட்டட வேலையின்போது மின்சாரம் பாய்ந்ததில் ராதிகா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே ராதிகா உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இந்த நிலையில், ராதிகாவின் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத் தர வலியுறுத்தி, கிராம மக்கள் போடி நகா் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

