மாநில குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

மாநில குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற குண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த தாளாளா் பிரபாகா். உடன் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :

மாநில குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் 67- ஆவது மாநில தடகளப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் 19 வயது பிரிவில் குண்டு எறிதலில் ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளியின் பிளஸ் 2 மாணவா் ஜஸ்வந்த் தங்கப் பதக்கமும், 17 வயது பிரிவில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

இதே போல, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடந்த கலைத் திருவிழாவில், களிமண்ணில் உருவம் செய்தல் போட்டியில் இதேபள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவா் மகேஷ் முதலிடம் பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், பள்ளித் தாளாளா் பிரபாகா் உள்ளிட்ட நிா்வாகிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.