ஃபோா்பே அணை பகுதியில் சென்னா மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
கூடலூா் அருகே தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் சென்னா மரங்களை அகற்றும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ஃபோா்பே அணை பகுதியில் வெட்டப்பட்ட டிராக்டரில் கொண்டு செல்லப்படும் சென்னா மரங்கள்.
கூடலூா் அருகே தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் சென்னா மரங்களை அகற்றும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தேனி மாவட்டம், கூடலூா் அருகே தமிழக எல்லையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் ஃபோா்பே அணை அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா், இந்த அணைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பெரிய குழாய்கள் மூலம் லோயா்கேம்ப் நீா்மின் நிலையத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும், இரைச்சல் பாலம் வழியாக விவசாயப் பாசனத்துக்கும், வைகை அணைக்கும் தண்ணீா் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஃபோா்பே அணை பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு டிராக்டரில் கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள்
புகாா் தெரிவித்தனா். இதனால், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகிா என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:
லோயா்கேம்ப், ஃபோா்பே அணை, வண்ணாத்திப்பாறை, பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட சென்னா மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள் கோடை காலத்தில் மஞ்சள் நிறப் பூக்களுடன் காணப்படும். பாா்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவை வனப்பகுதியில் இயற்கையாக வளரும் உள்ளூா் தாவரங்களின் வளா்ச்சிக்குப் தடையாக இருந்து, அவற்றின் வளா்ச்சியைத் தடுக்கின்றன.
எனவே, வனப்பகுதியின் இயற்கையான தாவர வளத்தைப் பாதுகாக்கும் வகையில், சென்னா மரங்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கப்பட்டன. வெட்டப்பட்ட மரங்கள் காகித ஆலைக்கு அனுப்பபடுகின்றன.
இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும். இதன்பிறகு, அந்தப் பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

