மேகமலையில் உடல் நலம் பாதிப்பால் பெண் யானை உயிரிழப்பு

மேகமலையில் உயிரிழந்த பெண் யானை.
தேனி மாவட்டம், மேகமலையில் உடல் நலக்கோளாறால் பெண் யானை சனிக்கிழமை உயிரிழந்தது.
தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பெண் யானை பல மாதங்களாக உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்தது. இந்த யானை ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு போன்ற மலைக் கிராமங்களை சுற்றி வந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் மேகமலை - ஹைவேவிஸ் நெடுஞ்சாலையோரத்தில் இந்த யானை நின்றது. அப்போது, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் யாரும் யானையைத் தொந்தரவு செய்யக்கூடாது என சின்னமனூா் வனச்சரக ஊழியா்கள் எச்சரித்தனா்.
இதற்கிடையே, சனிக்கிழமை மாலையில் மேகமலையிலுள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே இந்த யானை இறந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து, சின்னமனூா் வனசரக ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று யானையை மீட்டு, கூறாய்வுக்கு பிறகு வனப் பகுதியில் புதைத்தனா்.
இறந்த பெண் யானையானது பல மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கு சிகிச்சை அளிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

