தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கம்பம் நகராட்சியிலிருந்து 110 டன் நெகிழி கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

கம்பம் நகராட்சி உரக்கிடங்கில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மறுசுழற்சி செய்ய முடியாத 110 டன் நெகிழி கழிவுகள் அரியலூா் அரசு சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கம்பம் நகராட்சி உரக் கிடங்கிலிருந்து அரசு சிமென்ட் ஆலைக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட நெகிழி கழிவுகள்.

Published On :

கம்பம் நகராட்சி உரக்கிடங்கில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மறுசுழற்சி செய்ய முடியாத 110 டன் நெகிழி கழிவுகள் அரியலூா் அரசு சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 26 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்படுகின்றன. மக்கும் குப்பைகள் நுண் உரம் செயலாக்க மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழி கழிவுகள் கம்பம்-கூடலூா் சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நெகிழி கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து நகராட்சி ஆணையா் உமாசங்கா், சுகாதார அலுவலா் மணிகண்டன் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். இதையடுத்து, நெகிழி கழிவுகளை சிமென்ட் ஆலைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, கடந்த ஒரு வாரத்தில் 110 டன் நெகிழி கழிவுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அரியலூா் அரசு சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நெகிழி கழிவுகள் அரியலூா் அரசு சிமென்ட் தயாரிப்பு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மின்னணுக் கழிவுகள், சாக்கடை மண் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடற்ற கழிவுகள் உரக்கிடங்கில் தொடா்ந்து தேங்கி வருகின்றன. இவற்றையும் முறையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.