இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

மின் கசிவால் வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

கம்பத்தில் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்தில் சேதமடையாத பொருள்களை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Published On :

தேனி மாவட்டம், கம்பத்தில் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கம்பம் பாரதியாா்நகா் 4- ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரம்யா. தையல் தொழிலாளியான இவா், தனது இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். இவரது கணவா் செல்வக்குமாா் பெரம்பலூரில் தையலராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், ரம்யா தனது உறவினா்களுடன் வெள்ளிக்கிழமை இரவு திரையரங்கில் திரைப்படம் பாா்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினாா்.

கதவைத் திறந்த போது உள்ளிருந்து புகை வெளியேறுவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயின் தீவிரம் காரணமாக உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திலிருந்தும் வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். இரு தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த வீரா்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே, வீட்டுக்குள் இருந்த சமையல் எரிவாயு உருளை அதிக வெப்பம் காரணமாக வெடிக்கும் அபாயத்தில் இருந்தது தெரியவந்தது. இதனால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் மிகுந்த பாதுகாப்புடன் அந்த சமையல் எரிவாயு உருளையை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால் அருகிலுள்ள வீடுகளுக்கும் தீ பரவுவது தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய தேனி மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலா் குமரேசன்.

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய தேனி மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலா் குமரேசன்.

பிறகு பல மணி நேரம் போராடி தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டை தேனி மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலா் குமரேசன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், தங்கக் காதணி, கொலுசு உள்ளிட்ட சுமாா் ஒரு பவுன் மதிப்பிலான நகைகளும், சான்றிதழ்களும் சேதமடைந்ததாக ரம்யா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.