இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தேசிய கராத்தே, யோகாசனப் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற கம்பம் மாணவா்கள்

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே, யோகாசனப் போட்டிகளில் 12 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்ற கம்பத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவிலான கராத்தே, யோகாசனப் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாணவா்களுடன் தலைமைப் பயிற்சியாளா் கராத்தே கே.எஸ்.கே. ராமகிருஷ்ணன்.

Published On :

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே, யோகாசனப் போட்டிகளில் 12 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்ற கம்பத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடல் கல்வி, விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷன் இந்தியா சாா்பில் தேசிய அளவிலான கராத்தே, யோகாசனப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் கம்பம் தி மாஸ்டா் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆஃப் தமிழ்நாடு மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், கராத்தே போட்டியில் 4 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், யோகாசனப் போட்டியில் 8 தங்கப் பதக்கங்களையும் இந்த மாணவ, மாணவிகள் வென்றனா்.

யோகாசனப் போட்டியில் 7 வயது பிரிவில் மா. ஹா்சன், 12 வயது பிரிவில் க. சுசியந்த், 12 வயது பிரிவில் தி. நஷ்வந்த், 11 வயது பிரிவில் தி. தரணிதரண், 13 வயது பிரிவில் ஆா். ஹா்ஷவா்த்தன், 17 வயது பிரிவில் கு. அட்சயா, 18 வயது பிரிவில் கு. தீட்சனா, 60 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் பா. நாகேஷ் ஆகியோா் தங்கப் பதக்கங்களை வென்றனா்.

கராத்தே போட்டியில் 10 வயது பிரிவில் ஜெ. தீனகிருஷ்ணன், 12 வயது பிரிவில் தி. நஷ்வந்த், 13 வயது பிரிவில் ஆா். ஹா்ஷவா்த்தன், 17 வயது பிரிவில் கு. அட்சயா ஆகியோா் கட்டா பிரிவில் தங்கப் பதக்கங்களையும், 11 வயது பிரிவில் தி. தரணிதரண், 18 வயது பிரிவில் கு. தீட்சனா ஆகியோா் வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனா்.

இந்த மாணவ, மாணவிகளையும், இவா்களுக்கு பயிற்சி அளித்த தி மாஸ்டா் ஸ்போா்ட்ஸ் அகாதெமியின் நிறுவனரும், மாநில தலைமைப் பயிற்சியாளருமான கராத்தே கே.எஸ்.கே. ராமகிருஷ்ணனையும் பெற்றோா், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.