பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ஆசிய விளையாட்டுகள்: 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் இந்திய மகளிா் அணிக்கு தங்கப் பதக்கம்!

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிா் ஹாக்கியில் இந்தியா 1-0 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான சீனாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிா் ஹாக்கியில் இந்தியா 1-0 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான சீனாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

Published On :

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிா் ஹாக்கியில் இந்தியா 1-0 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான சீனாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

இதன் மூலமாக, ஆசிய விளையாட்டுகளில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிா் ஹாக்கி அணி, 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தகுதிபெற்று அசத்தியது.

ஆசிய விளையாட்டுகளில் கடைசியாக 1982-இல் தங்கம் வென்ற இந்திய மகளிா், அதன் பிறகு 1998, 2018-இல் இறுதி வரை வந்து வெள்ளியுடன் திரும்பியது நினைவுகூரத்தக்கது. தற்போது தங்கம் வென்ற இந்திய மகளிா் அணிக்கு தலா ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசை, இந்திய ஹாக்கி சங்கம் அறிவித்துள்ளது.

6 தங்கங்கள்: ஆசிய விளையாட்டுகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை அறுவடை செய்தது.

இதில் குத்துச்சண்டையில் 3 தங்கம், மல்யுத்தம், வில்வித்தை, ஹாக்கியில் தலா ஒரு தங்கம் கிடைத்தன. இத்துடன், மொத்தமாக 16 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என, 76 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.