2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ரேஷன் கடையிலிருந்து அரிசியை கடத்த முயன்றவரை எம்.எல்.ஏ. பிடித்து போலீஸில் ஒப்படைப்பு

கம்பத்தில் ரேஷன் கடையிலிருந்து அரிசியைக் கடத்த முயன்றவரை சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பிடித்து செவ்வாய்க்கிழமை போலீஸாரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கம்பத்தில் ரேஷன் கடையிலிருந்து அரிசியை கடத்த முயன்றவரிடம் விசாரணை நடத்திய எம்.எல்.ஏ. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா.

Published On :

கம்பத்தில் ரேஷன் கடையிலிருந்து அரிசியைக் கடத்த முயன்றவரை சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பிடித்து செவ்வாய்க்கிழமை போலீஸாரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நெல்லுக்குத்தி புளியமரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது,

அங்கு ரேஷன் கடை விற்பனையாளா் இல்லாத நிலையில், இருவா் ரேஷன் அரிசியை எடை போட்டுக் கொண்டிருந்ததும், எம்.எல்.ஏ.வைக் கண்டதும், அவா்களில் ஒருவா் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

பிடிபட்டவரிடம் எம்.எல்.ஏ. விசாரணை நடத்தியதில், அவரிடம்

ரேஷன் அட்டை இல்லாததுடன், அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து சந்தேகமடைந்த எம்.எல்.ஏ., மதுரை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சிவக்குமாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அந்த நபா் கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியைச் சோ்ந்த காஜா மைதீன் (55) என்பதும், தப்பியோடியவா் கணேசன் என்பதும் தெரியவந்தது. காஜா மைதீனைப் போலீஸாா் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தப்பியோடிய கணேசனைத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே, ரேஷன் கடை விற்பனையாளரை வரவழைத்த எம்.எல்.ஏ., கடை திறந்திருந்த நிலையில் அவா் அங்கு இல்லாதது குறித்து விசாரித்தாா். அதற்கு, அவசர வேலை காரணமாக அவா் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு, கடையில் கணேசனை உதவியாளராகப் பணியில் அமா்த்திவிட்டு சென்றதாகவும் தெரிவித்தாா்.

ரேஷன் கடையில் எடையாளா் (பேக்கா்) பணியிடம் ஓராண்டாக

காலியாக இருப்பதால், தற்காலிகமாக கணேசனை உதவியாளராக வைத்திருந்ததாகவும் விற்பனையாளா் விளக்கம் அளித்தாா். அவரிடம்

ரேஷன் கடை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு எம்எல்ஏ அறிவுறுத்தினாா். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.