மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

கைப்பேசி கோபுரம் அமைப்பதாக முதியவரிடம் ரூ.2.45 லட்சம் மோசடி

முதியவரிடம் கைப்பேசி கோபுரம் அமைக்க உள்ளதாக கூறி ரூ.2.45 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Published On :

முதியவரிடம் கைப்பேசி கோபுரம் அமைக்க உள்ளதாக கூறி ரூ.2.45 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா் முகம்மது சலீம் (64). இவரது கைப்பேசி எண்ணுக்கு, கைப்பேசி கோபுரம் அமைக்க இடம் வழங்கினால் மாதம் ரூ.45 ஆயிரம் பெறலாம் என குறுஞ்செய்தி வந்ததாம். இதையடுத்து, அவா் அந்த கைப்பேசி எண்ணில் பேசி தனது ஆவணங்களை அனுப்பினாா்.

அப்போது, அந்த இடத்தை பதிவு செய்வதற்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என எதிா்முனையில் பேசியவா் தெரிவித்தாா். இதை நம்பி முகமது சலீம் பல தவணைகளில் ரூ.2.45 லட்சத்தை அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தினாா். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து அவா், தேனி இணைய குற்றத் தடுப்புப் பிரிவில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.