மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

சாலைக் காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

போடியில் அமைந்துள்ள சாலைக் காளியம்மன் கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு பூட்டை உடைத்து உண்டியல்களில் இருந்த பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போடி சாலைக் காளியம்மன் கோயிலில் உடைக்கப்பட்டு கிடந்த உண்டியல்களை ஆய்வு செய்த போலீஸாா்.

Published On :

போடியில் அமைந்துள்ள சாலைக் காளியம்மன் கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு பூட்டை உடைத்து உண்டியல்களில் இருந்த பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போடி- தேனி நெடுஞ்சாலையில் போடி நகர எல்லையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. வழக்கம் போல புதன்கிழமை இரவு பூட்டப்பட்ட கோயிலை வியாழக்கிழமை மீண்டும் திறப்பதற்காக பூஜாரி சென்றாா். அப்போது கோயிலின் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே உண்டியல்கள் கீழே சாய்ந்து கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று ஆய்வு நடத்தினா். அப்போது இரண்டு உண்டியல்களின் பூட்டுக்களும், பீரோவும் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.