தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

சாலை விபத்தில் மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

போடியில் சாலையோர இரும்புக் கம்பத்தில் மூன்று சக்கர வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த பொன்னன் மகன் சந்திரன் (58). மாற்றுத் திறனாளி. போடி மூணாறு சாலையில் தனியாா் வீட்டுமனை இடத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்துவிட்டு திரும்ப வேலை செய்யும் இடத்துக்கு மூன்று சக்கர வாகனத்தில் சென்றாா். போடி மூணாறு சாலையில் அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரி அருகே சென்ற போது சாலையோரம் இருந்த இரும்புக் கம்பத்தில் இவரது வாகனம் மோதியது. இதில் சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.