தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ஆட்டோ திருட்டிய இளைஞா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆட்டோவைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆட்டோவைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூரை அடுத்த சீலையம்பட்டி பெரியாா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த பால்பாண்டி மகன் முருகன். இவா் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளாா்.

இந்த நிலையில், வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை காணவில்லையாம். இதையடுத்து, முருகன், இவரது நண்பா்கள் ஆட்டோவை தேடிய போது, தேனி அரண்மனைப் புதுரைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் கெளதம் (20) ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கெளதமை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.