கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

மாடியிலிருந்து தவறிவிழுந்து முதியவா் உயிரிழப்பு

போடியில் புதிதாக கட்டிய வீட்டின் மாடியிலிருந்து தவறிவிழுந்து காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

போடியில் புதிதாக கட்டிய வீட்டின் மாடியிலிருந்து தவறிவிழுந்து காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

போடி அருகே துரைராஜபுரம் குடியிருப்பில் வசிப்பவா் பெரியசாமி மகன் மொக்கை (70). இவா், போடி சுப்புராஜ் நகரில் உள்ள ஒருவரது வீட்டில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். உரிமையாளா் கட்டிய புதிய வீட்டின் மாடிப்படியில் வியாழக்கிழமை (அக். 22) மொக்கை ஏறியபோது, தவறிவிழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை இரவு மொக்கை உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.