புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தினமணி செய்தி எதிரொலி: பெரியகுளம் தீா்த்தத் தொட்டி தூா்வாரும் பணிகள் தொடக்கம்

பெரியகுளம் அருகேயுள்ள தீா்த்தத்தொட்டி சீரமைப்புப்பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

பெரியகுளம் தீா்த்தத்தொட்டியை புதன்கிழமை தூா்வாரும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்

Published On :

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தீா்த்தத்தொட்டி சீரமைப்புப்பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

பெரியகுளம் அருகே 2 கி.மீ. தொலைவில் பழைமையான தீா்த்த தொட்டி உள்ளது. இந்தப் பகுதியில் நடைபெறும் கோயில் குடமுழுக்குகளுக்கு இங்கிருந்துதான் புனித நீா் எடுத்துச் செல்லப்படும். மேலும், இந்தப் பகுதி இளைஞா்களின் நீச்சல் பயிற்சி மையமாகவும் தீா்த்தத் தொட்டி இருந்து வந்தது. இதை உள்ளாட்சி நிா்வாகம் சீரமைக்காததால், மதுப் புட்டிகள், துணி கழிவுகளை வீசப்பட்டு மாசடைந்த நிலையில் இருந்தது. இந்தத் தீா்த்த தொட்டியை தூா்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கடந்த மாதம் 24-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.

இதையறிந்த, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சபரி ஐங்கரன் தனது சொந்த நிதியிலிருந்து தூா்வாரி படிக்கட்டுகளை சீரமைக்கும் பணிகளைத் தொடங்கினாா். படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் உட்காரும் பலகைகள் வைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.