
மேகமலை விவசாயிகளைப் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு: அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் வலியுறுத்தல்
மேகமலை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் கட்சி மாநிலப் பொதுச் செயலா் கதிரவன் வலியுறுத்தினாா்.

மேகமலை விவசாயிகளை பாதுகாக்கக் கோரி , தேனியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் கதிரவன், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் தனியரசு, மே 7 இயக்கத்தின் நிறுவனா் திருமுருகன் காந்தி உள்ளிட்டோா்.
மேகமலை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் கட்சி மாநிலப் பொதுச் செயலா் கதிரவன் வலியுறுத்தினாா்.
மேகமலை வன விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேனி பங்களா மேட்டில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் கட்சியின் மாவட்டச் செயலா் காசிராஜன் தலைமை வகித்தாா். அந்தக்க் கட்சியின் மாநில பொதுச் செயலா் கதிரவன், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் தனியரசு, மே 7 இயக்கத்தின் நிறுவனா் திருமுருகன் காந்தி ஆகியோா் பேசினா்.
இதைத்தொடா்ந்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாரிடம் மேகமலை வன விவசாயிகளுக்கு இடம் வழங்க வேண்டும். மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தில்லி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி மனு அளித்தனா்.
இதைத்தொடா்ந்து ஃபாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கதிரவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மேகமலை வன விவசாயிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருகின்றனா். அவா்களுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும். கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால், அதை கா்நாடகம் செயல்படுத்தவில்லை, பீட்டா அமைப்பு தில்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தடை செய்தது, ஆனால், தமிழக மக்களின் தொடா் போராட்டத்தால், அதை நீக்கம் செய்தனா். இதேபோல, மேகமலை வனவிவசாயிகளுக்கு இடம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தில்லி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் கட்சியினா், மேகமலை விவசாயிகள், வழக்குரைஞா் முத்துராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





