கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

சிஜேபியுடன் கைகோக்கும் அகில இந்திய மாணவர் சங்கம்! செப்.5 தில்லி பேரணிக்கு ஆதரவு!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அமைதிப்பேரணிக்கு அகில இந்திய மாணவர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது...

aisf neha bora

அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா - பிடிஐ

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:01 pm IST

தில்லியில், நடைபெறவுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) அமைதிப்பேரணிக்கு அகில இந்திய மாணவர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியில் சிஜேபி நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ஜூலை 25 ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

ஆனால், போராட்டத்தைக் கைவிடுவதற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறியதவுள்ளதாக சிஜேபி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். இதனை எதிர்த்து வரும் செப். 5 ஆம் தேதி ஆசிரியர் நாளை முன்னிட்டு தில்லியின் இந்தியா கேட் பகுதியில் இருந்து அமைதிப் பேரணி நடத்தப்படும் என சிஜேபி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினர் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு அகில இந்திய மாணவர் சங்கம் இன்று (ஆக. 26) ஆதரவு அளித்துள்ளது.

இதுபற்றி, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போரா கூறியதாவது:

“அனைத்து வழக்குகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாணவர்கள் மீதான பெல்லட் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த விவகாரம் குறித்து முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் என்டிஏ மற்றும் நீட் தேர்வுகள் போன்ற அதிகாரக் குவிப்புக்கு எதிராக எழும் போராட்டங்களோ அல்லது மாநில மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி அளவிலான போராட்டங்களோ; எதுவாக இருந்தாலும் உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் எங்கள் ஆதரவு இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம், ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் அகில இந்திய மாணவர் சங்கம் பங்கேற்று ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The All India Students' Association has extended its support to the peace rally to be held in Delhi by the CJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.