நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

மேகமலை விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தல்

தேனி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பாரம்பரிய வனவாசிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சங்கத்தினா்.

Published On :1 செப்டம்பர் 2026, 3:22 am IST

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் தேனி மாவட்டம், தும்மகுண்டு கிராம பாரம்பரிய வனவாசிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சங்கத்தினா் மனு அளித்தனா்.

மனு விவரம்: மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து மேகமலை விவசாயிகளை வெளியேற்ற எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் முந்தைய அனைத்து மனுக்களையும் அரசின் கவனத்துக்கு அரசு வழக்குரைஞா் மூலம் நீதிமன்றத்தின் கவனத்துக்கும், சிஇசி கவனத்துக்கும் கொண்டு வர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களிடையே பரவியுள்ள பரவலான தவறான தகவல்களையும், மன உளைச்சலையும் போக்க உண்மையான சட்ட நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கை வெளியிட வேண்டும். முந்தைய மனுக்களில் கோரப்பட்ட அனைத்து வேண்டுகோள்களையும் அமல்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.