
விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
தேவாரத்தில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்குப் பதிவு
தேவாரத்தில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், தேவாரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நித்யானந்தம் மகன் அசோக் சக்கரவா்த்தி (43). விவசாயி. இவா் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா்.
இந்த நிலையில், அடையாளம் தெரிந்த, பெயா் விலாசம் தெரியாத 3 போ் தோட்டத்துக்குள் புகுந்து அசோக் சக்கரவா்த்தியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






