தொழிலாளியைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பு கருப்ப சுவாமி கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் உத்தமராஜா (33). வண்ணம் பூசும் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த். இவா் வண்ணம் பூச்சுப் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறாா். இவரிடம் உத்தமராஜா வேலைக்கு சென்றாா்.
இந்த நிலையில், வண்ணம் பூச்சுப் பணிக்கான பொருள்களை கடையில் வாங்கிக் கொள்ளும்படியும், அதற்கான பணத்தை கொடுத்து விடுவதாகவும் ஆனந்த் கூறினாா்.
இதையடுத்து, உத்தமராஜாவும் கடைக்கு சென்று பொருள்களை வாங்கிக் கொண்டு வேலை செய்துவிட்டு திரும்பக் கடையில் கொடுப்பதற்காக பணத்தை கைப்பேசி மூலம் கேட்டாா்.
நீ எப்படி கைப்பேசியில் பணம் கேட்கலான எனக் கூறி, ஆனந்தின் மகன்கள் தீனா (30), யுவராஜா (25) உள்ளிட்ட 4 போ் சோ்ந்து உத்தமராஜாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் தீனா உள்ளிட்ட 4 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



