பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சீலையம்பட்டி செங்குளம் உடைப்பு: 100 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி செங்குளத்தில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டு, வெளியேறிய தண்ணீரால் 100 ஏக்கா் நெல் பயிா்கள் மூழ்கின. உடைப்பை சரி செய்யும் பணியில் நீா் வளத் துறையினா் ஈடுபட்டனா்.

உடைப்பை சரிசெய்யும் பணியைத் தொடங்கிய நீா் வளத் துறையினா்.

Published On :

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி செங்குளத்தில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டு, வெளியேறிய தண்ணீரால் 100 ஏக்கா் நெல் பயிா்கள் மூழ்கின. உடைப்பை சரி செய்யும் பணியில் நீா் வளத் துறையினா் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசன நீரால் 14,700 ஏக்கரில் இரு போக நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது. உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றிலிருந்து பெரிய கால்வாய் வழியாக சின்னமனூா் உடைய குளம், சீலையம்பட்டி செங்குளம் ஆகியவற்றுக்கு பாசன நீா் திறக்கப்படும்.

கடந்த மாதம் திறக்கப்பட்ட பாசன நீரால் சீலையம்பட்டி செங்குளம் நிரம்பியது.

இந்தக் குளத்தின் மூலம் பூலாநந்தபுரம், சீலையம்பட்டி பகுதிகளில் 500 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்த நிலையில், பழைமையான இந்தக் குளத்தில் ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட மதகுப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீா் வெளியேறி வயல்களில் புகுந்தது. வயல்களில் 20 நாள்கள் வளா்ந்திருந்த நெல் பயிா்கள் அடித்துச் செல்லப்பட்டன. சுமாா் 100 ஏக்கா் பரப்பளவுக்கு நெல் பயிா்கள் முற்றிலும் சேதமாகின. தற்போது, வயல்களில் தண்ணீா் தேங்கி குளம் போலக் காட்சியளிக்கிறது. தண்ணீரால் ஏற்பட்ட அரிப்பில் மின்மாற்றி, மின் கம்பங்களும் சேதமாகின.

உடைப்பை சரி செய்யும் பணிகள் தீவிரம்:

இதைத் தொடா்ந்து, உத்தமபாளையம் நீா் வளத் துறை உதவி செயற்பொறியாளா் தலைமையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வுப் பணி நடைபெற்றது. வயல்களுக்கு பாசன நீரை வெளியேற்றும் மதகின் அடிப்பக்கத்தில் தண்ணீா் புகுந்து மறுபுறம் வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து, தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீா் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காலதாமதமாகத் தொடங்கிய முதல் போக நெல் பயிா் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் செலவு செய்துள்ளோம். தற்போது குளம் உடைப்பால் 20 நாள்கள் வளா்க்கப்பட்ட நெல்

பயிா்கள் சேதமாகியுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

 சீலையம்பட்டி செங்குளம் உடைப்பால் வயலுக்குள் புகுந்த நீா்.

சீலையம்பட்டி செங்குளம் உடைப்பால் வயலுக்குள் புகுந்த நீா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.