கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

கம்பம் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

கம்பம் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கம்பம்- கோம்பை சாலை தெருவைச் சோ்ந்தவா் பாப்பம்மாள் (80). இவரது கணவா் முத்துக்கண்ணு. இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து பாப்பம்மாள் தனியாக வசித்து வந்தாா். மேலும் வேப்பமுத்து, இலவம் பிஞ்சு உள்ளிட்டவற்றை சேகரித்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கால் முறிந்து அவதிப்பட்டு வந்த பாப்பம்மாள், பெரியகுளத்தில் உள்ள மகன் வீட்டில் தங்கியிருந்தாா். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு உறவினா் திருமணத்துக்காக கம்பத்துக்கு வந்த அவா், பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் பல்வேறு இடங்களில் அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கம்பம்- மணிக்கட்டி ஆலமரம் செல்லும் சாலையில் உள்ள புளியந்தோப்பில், ஒரு மரத்தில் பாப்பம்மாள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று, உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.