சீனாவில் டிரம்ப் - ஜின்பிங் - புதின் முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது!வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

புரட்டாசி இரண்டாவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

அனுமன் வாகனத்தில் அருள்பாலித்த பெரியகுளம் வரதராஜப் பெருமாள்.

Updated On :

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள நாமத்வாரில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, தாமரைக்குளம் மலைமேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் பெருமாள் கோயில்,

ஆண்டிபட்டியில் அமைந்துள்ள ஜம்புலிபுத்தூா் கதலிநரசிங்கப் பெருமாள் கோயில், குள்ளப்புரம் பெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேமும், ஆராதனையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

இதேபோல, தேனி பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

போடி: போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜையும், மூலவருக்கு மங்கல பொருள்களால் திருமஞ்சன அபிசேகமும் நடைபெற்றன. ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் காா்த்திக் (எ) சீனிவாசவரதன், கட்டளைதாரா்கள் செய்திருந்தனா்.

பெரியகுளம் நாமத்வாரில் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த ராதே கிருஷ்ணா்.

பெரியகுளம் நாமத்வாரில் மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த ராதே கிருஷ்ணா்.

இதேபோல, போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயா் சுவாமி கோயில், போடி போஸ் கடைவீதி ஸ்ரீ ராமா் கோயில், மேலச்சொக்கநாதபுரம் ஸ்ரீதொட்டராயா் சுவாமி கோயில், தேவாரம் ஸ்ரீ ரெங்கநாதா் கோயில், சிலமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொங்கல் வைத்து வழிபாடுகளும் நடத்தப்பட்டன. போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள சங்கர நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.