
மாடியிலிருந்த தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சடலம் - கோப்புப் படம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சுருளிப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் கரிகாலன் (38). கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் குடிநீா் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, கரிகாலன், வீட்டு மாடியில் தண்ணீா் தொட்டியிலிருந்து வரும் குழாய் இணைப்பை சரிசெய்து கொண்டிருந்தாராம்.
அப்போது, மாடியில் நெகிழித் தகட்டில் கரிகாலன் கால் வைத்த போது அது உடைந்து அங்கிருந்து கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



