அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொடக்க-நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 10 நாள் பயிற்சி: மாநிலம் முழுவதும் இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார  வளமையத்திற்கு உட்பட்ட  அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்  தலைமையாசிரியர்களுக்கான இப்பயிற்சி நகர்மன்ற நடுநிலைப்பள்ளி ஊரணிப்பட்டியில் வைத்து தொடங்கியது. பயிற்சியை வட்டார வள மேற்பார்வையாளர் கி.ராமசுப்பு

News image
Updated On :4 பிப்ரவரி 2013, 10:49 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார  வளமையத்திற்கு உட்பட்ட  அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்  தலைமையாசிரியர்களுக்கான இப்பயிற்சி நகர்மன்ற நடுநிலைப்பள்ளி ஊரணிப்பட்டியில் வைத்து தொடங்கியது. பயிற்சியை வட்டார வள மேற்பார்வையாளர் கி.ராமசுப்பு தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு, இதுவரை பள்ளிச்சுழலில் தலைமையாசிரியர்கள் சந்தித்த பிரச்சனைகளும், அவற்றை கையாண்ட விதமும், வெற்றிகளும், பள்ளி நிர்வாகம், உள்ளார்ந்த மேற்பார்வைகளும், ஆய்வுகளும், உறுதிவாய்ந்த  நேர்மறையான ஆளுமைத்திறன், தொடர்பு கொள்ளும் திறன் சார்ந்த வளர்ச்சி, பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வுகாணும் திறன், நேர்மையாக  முடிவெடுக்கும் திறன், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009, மாணவர்களுக்கான வழிகாட்டுதலும்-அறிவுரைபகர்தலும், யோகா, தியானம், மனவள கலை மன்ற செயல்பாடுகள், உடல்நலக்கல்வி, தன் சுத்தம், சுற்றுச்சுழல் விழிப்புணர்வு, நேர மேலாண்மை, மன அழுத்த மேலாண்மை, பள்ளி வளர்ச்சித்திட்டம், நிதி மேலாண்மை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, வளரறி மற்றும் தொகுத்தறி  செயல்பாடுகள், வகுப்பு வாரியாக ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கடினமான பகுதிகளை எளிமையாக கற்பிக்கும் முறைகள், வகுப்பறை ஆங்கிலம் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் பயிற்சியின் இறுதியில் அன்றைய தலைப்பு சார்ந்த கலந்துரையாடல்  நடைபெறும் என்று கூறினார்.

பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் பா.வனிதா, கி.பெத்தணசாமி, சு.முருகு திருநாவுக்கரசு, மு.சி.சுகந்தி ராசி, ரா.உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்  பரமேஸ்வரன் ஆகியோர் செயல்படுகின்றனர். பயிற்சியில் 60க்கும் மேற்பட்ட  தலைமையாசிரியர்கள்

கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.