டி.மானகசேரியில் 468 பயனாளிகளுக்கு வேஷ்டி-சேலை: ஒன்றியக்குழுத் தலைவர் காளிமுத்து வழங்கினார்
இதற்கான விழா வட்டாட்சியர் ஐ.திரௌபதி தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மாயக்கண்ணன் வரவேற்றார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சியில் 468 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி-சேலைகளை ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து வழங்கினார்.
இதற்கான விழா வட்டாட்சியர் ஐ.திரௌபதி தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மாயக்கண்ணன் வரவேற்றார்.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி-சேலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டார். முதல்வரின் திட்டங்கள் முழு அளவில் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை அ.தி.மு.க. தொண்டர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தொண்டர்கள், முதல்வரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. தொகுதி இணைச் செயலாளர் ராமையாபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கிராம மக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் செந்தூர்பாண்டி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...