மம்சாபுரம் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா
ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் முத்து, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பிலாவடியான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசுகையில், திருக்குறளின் மேன்மை குறித்தும், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் அற


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா தாளாளர் மற்றும் முதல்வர் ர.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.தலைமை ஆசிரியை நளினா சேகரன் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் முத்து, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பிலாவடியான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசுகையில், திருக்குறளின் மேன்மை குறித்தும், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் அற வழியை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கினர். மேலும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்தும் விளக்கி உரையாற்றினர்.
பின்னர் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...