அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மல்லி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் கட்டாய கல்வி பயில பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி உயர்கல்விக்கு செல்ல வேண்டும். ஆதரவற்ற பள்ளி வயது குழந்தைகளை உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். அரசின் கல்வி  சலுகைகள் அனைத்தையும்  மாணவர்கள் பெற்று

News image
Updated On :26 ஜனவரி 2013, 11:51 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி ஊராட்சியில்  கிராம சபைக் கூட்டம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு தலைமையில் நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த கூட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.கி.இராமசுப்பு கலந்து கொண்டு பேசியதாவது:

பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் கட்டாய கல்வி பயில பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி உயர்கல்விக்கு செல்ல வேண்டும். ஆதரவற்ற பள்ளி வயது குழந்தைகளை உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். அரசின் கல்வி  சலுகைகள் அனைத்தையும்  மாணவர்கள் பெற்று பயனடைய பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மாற்றுத் திறனுடைய குழந்தைகளை தகுந்த சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.கிராம சபைக் கூட்டங்களில் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.