அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே பேரணியை ரோட்டரி தலைவரும், பசுமை பாரத இயக்க தலைவருமான துரைப்பாண்டியன் தலைமையில், நகர் காவல்

News image
Updated On :30 ஜனவரி 2013, 9:20 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் கிரீன் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே பேரணியை ரோட்டரி தலைவரும், பசுமை பாரத இயக்க தலைவருமான துரைப்பாண்டியன் தலைமையில், நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.பேரணியில், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி  மாணவிகள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பல்வேறு தனியார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். பேரணி நகரின் பல்வேறு வீதிகளின் வழியே வந்து ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு நிறைவு பெற்றது.பின்னர் வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் செல்வக்குமார், பசுமைப் பெண்கள் இயக்கத்தின் ரெங்கநாயகி, மஞ்சுளா, ஜோதி மற்றும் மகேந்திரன், சண்முகநாதன், குருநாதன், ஜான், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.