மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை

நரிக்குடி அருகேயுள்ள ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

Updated On :26 ஏப்ரல் 2015, 6:43 pm

நரிக்குடி அருகேயுள்ள ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூம்பிடாகை, கல்விமடை, கருவக்குடி, புல்வாய்க்கரை, பிள்ளையார்குளம், அழகாபுரி, நேர்த்தியாயிருப்பு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும் வெளி நோயாளிகளாக 200 பேர் வரை வருகின்றனர். உள்நோயாளிகளாக 10 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது ஒரு மருத்துவர் மட்டுமே பணிபுரிகிறார். அதிகமானோர் ஒரே நேரத்தில் வருவதால் அவர் சிகிச்சை அளிக்க சிரமப்பட வேண்டியுள்ளது. இரவில் தற்கொலை முயற்சி, விபத்துகள், பெண்களுக்கு பிரசவ வலி சமயங்களில் சிகிச்சை அளிக்க இயலவில்லை.

இரவில் மருத்துவர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

எனவே இங்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து அவர்கள் இரவிலும் தங்கிப் பணிபுரிய வசதி செய்துதர வேண்டும் என சுற்றுப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.