நூறு நாள் வேலை வழங்கக் கோரி வெள்ளூர் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

விருதுநகர் அருகே வெள்ளூரில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, அக்கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே வெள்ளூரில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, அக்கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
     வெள்ளூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், 100-க்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிய பதிவு செய்துள்ளனர்.
     இந்நிலையில், 2018 ஏப்ரல் மாதம் முதல் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களுக்கு பணி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கிராம சபைக் கூட்டத்தில் ஓராண்டுக்கான பணியாளர்கள் குறைந்த அளவிலேயே தேர்வு செய்துள்ளனராம். அதை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
    இதையறிந்த வெள்ளூர் கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகை யிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாதர் சங்க மாநிலச் செயலர் லெட்சுமி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com