டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

விருதுநகர் நகராட்சி பூங்காவை சீரமைக்க கோரிக்கை

விருதுநகர், ராமச்சந்திரன் தெருவில் உள்ள நகராட்சி பூங்கா பாரமரிப்பில்லாததால், சிதிலமடைந்து காட்சிப் பொருளாக உள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:29 am IST

விருதுநகர், ராமச்சந்திரன் தெருவில் உள்ள நகராட்சி பூங்கா பாரமரிப்பில்லாததால், சிதிலமடைந்து காட்சிப் பொருளாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  விருதுநகர் நகராட்சி 9-ஆவது வார்டுக்கு உள்பட்ட ராமச்சந்திரன் தெருவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2009-2010-இல் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டது. 
 அதில் செயற்கை நீரூற்று, நடைபாதை, பூச்செடிகள், சிறுவர், சிறுமிகளுக்கான சறுக்கு மற்றும் ஏற்ற, இறக்கம் முதலானவை அமைக்கப்பட்டன. மேலும், சுற்றுச் சுவர் உள்ள பகுதிகளில் வண்ண ஓவியங்களும் வரையப்பட்டன. 
 பூங்கா பணிகள் நிறைவடைந்தும் உடனடியாக திறக்கப்படவில்லை. பின்னர், பொதுமக்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பூங்கா பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. ஆனால், பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று செயல்படவில்லை. மேலும், ஓவியங்கள் வண்ணமிழந்து விட்டன. அதேபோல், பராமரிப்பு இல்லாததால் பூங்காவின் உள் பகுதியில் முள்செடிகளும் வளர்ந்தன.
 இதனால், பூங்காவுக்கு சிறுவர், சிறுமியர், பொது மக்கள் வருகை முற்றிலும் குறைந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, விருதுநகரில் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பலர் குழந்தைகளுடன் மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் கூடுதல் பணம் செலவு, கால விரயம் ஏற்படுகிறது.
 எனவே, விருதுநகர் ராமச்சந்திரன் தெருவில் உள்ள பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.