ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் சாஸ்தா கோவில் நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேவதானம், சேத்தூர், முகவூர், தளவாய்புரம், இளந்திரை கொண்டான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு நெல் விவசாயத்துக்கு நீராதாரமாக அந்தந்த பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.
மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் அடிவாரத்தில் உள்ள சாஸ்தா கோயில் நீர்த் தேக்கத்தில் சேகரிக்கப்பட்டு விவசாய தேவைக்கேற்ப திறந்து விடப்படும். 2 மாதங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் இந்த நீர்த்தேக்கம் தனது கொள்ளளவான 33 அடியை எட்டி மாறுகால் பாய்ந்தது. தற்போது மழை பெய்யாததால் நகரியாற்றில் நீர்வரத்து இன்றி, நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியது: தற்போது ஆடி மாதத்தில் முதல் போக சாகுபடிக்காக நிலங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சாஸ்தா கோவில் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் விரைவாக குறைந்து வருவதால் கவலை அடைந்துள்ளோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் இப்பகுதிகளில் மட்டும் பெய்யவில்லை. எனினும் வரும் காலங்களிலாவது மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடை உரிமையாளரை தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் கரடியை துரத்திய நாய்

பவானி அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் சித்த மருத்துவா் உயிரிழப்பு

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்ட சாலை அமைப்புப் பணி: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


